தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த இருவரும் இலங்கைத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகின்றது. நேற்று (09) இரவு, உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றின் நீர்த்தாங்கிக்குள் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு காவல்துறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது, குறித்த பண்ணையில் இருந்த 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பெரிய நீர்த்தாங்கி ஒன்றில் சிக்கி, 50 வயதுடைய கொரிய நாட்டவரும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்த கொரிய நாட்டவர் அந்த மீன் வளர்ப்புப் பண்ணையின் முகாமையாளராகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
தென்கொரியாவில் இரு இலங்கையர்கள் உயிாிழப்பு – Global Tamil News
4