3
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்றவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதியில் இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. அதனை அவ்வீதியால் சென்ற முச்சக்கர வண்டி சாரதி அவதானித்து, மோதலில் ஈடுபட்ட கும்பலை சமாதானப்படுத்த முற்பட்ட வேளை, சாரதி மீதும் கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.குறித்த மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்ற சாரதி மற்றும் மோதலில் ஈடுப்பட்ட கும்பலை சேர்ந்த நால்வர் என ஐவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.