கொழும்பில் கைத்துப்பாக்கியுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது , கைத்துப்பாக்கியை தான் பிறிதொரு நபருக்கு வழங்க எடுத்து சென்றதாக கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியை பெற இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை வீதி போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த காரினை மறித்து சோதனையிட முயன்றுள்ளனர். அதன்போது சாரதி , காரினை நிறுத்தாது பொலிஸாரின் கட்டளையை மீறி தொடர்ந்து பயணித்துள்ளார். அதனை அடுத்து பொலிஸார் காரினை துரத்தி சென்று , வழிமறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது, காரின் சாரதியின் இருக்கையின் கீழிருந்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். அதனை அடுத்து , சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் , கைத்துப்பாக்கியை வத்தளையை சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்க வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் , சாரதி குறிப்பிட்ட நபரையும் வத்தளை பகுதியில் வைத்து , பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் யாழ்.வாசி கைது
7