இலங்கையில் தொல்பொருளியல் திணைக்கள சபைக்கு முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு.மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் இத்திணைக்களம் முக்கிய பணியாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்; அவற்றைப் பதிவு செய்தல்; இம்மரபுரிமை தொடர்பாக மக்களிடையே அறிவை வளர்த்தல்; தொல்லியல் களங்களையும், நினைவுச்சின்னங்களையும், தொல்பொருட்களையும் பேணிப் பாதுகாத்தல்; தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்பன இத்திணைக்களத்தின் செயற்பாட்டு வரம்புக்குள் அடங்குகின்றன.இந்நிலையிலேயே முன்னைய அரசு;களை போன்றே தற்போதைய அரசும் முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது பௌத்த விசுவாச நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு.
2
previous post
செல்வத்தை விசாரிக்க குழு!
next post