4
எழுவர் சரணடைய தயாராம்! மத்திய கிழக்கில் மறைந்திருக்கும் ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இதனிடையே இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் தெஹிபாலே மல்லி என்ற நபருக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது