கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி விட்டு தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரினை ஒத்த காரில் யாழ்ப்பாணத்தில் பயணித்த , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் மற்றும் பெண்ணொருவர் , தென்னிலங்கை வாசி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு – யாழில். காரில் பயணித்த மூவர் கைது – Global Tamil News
1