3
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற ‘பூகுடு கண்ணா’ என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கார் ஒன்றில் சென்ற நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் காவற்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 43 வயதுடைய நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்