நான் சொத்துக்கள் குவித்து வைத்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் என்மீது சட்டநடவடிக்கை எடுத்து எனது பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதத்தை தெரிவிக்கின்றேன் என சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்களது பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாகக் கேட்கிறேன்.எனது பெயரிலோ, எனது சிபாரிசிலோ கடந்த காலங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏதும் பெற்றிருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன். உடனடி விசாரைணை நடத்தி என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பட்சத்தில் என்மீது சட்ட நடவடிக்கை எடுத்து என் பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதம் தெரிவிப்பதுடன் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்தார்.
பதவியை பறித்தாலும் பயமில்லை:சிறீதரன்!
6
previous post