மில்லர்:விற்பனைக்கல்ல!

by ilankai

விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தனது மகனை சினிமா துறைக்குள் புகுத்த முதற்கரும்புலி மில்லரின் பெயரில் இந்திய சினிமாக கலைஞர்கள் சகிதம் முன்னெடுக்கப்பட்ட நாடகமே தடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக தமது நிறுவனத்தினால் வெளிவரவுள்ள மில்லர் திரைப்படத்தின் பெயரானது மாற்றப்பட்டுள்ளதாக தொடர்புடைய வர்த்தகர் இன்று அறிவித்துள்ளார்.தமிழ் உணர்வாளர்கள் பலரும் திரைப்படத்திற்கு ‘மில்லர்’ என்ற பெயரை தவிர்க்குமாறு கோரியிருந்தனர்.எங்களுடைய பயணத்தில் மிக நெருக்கமாகப் பயணித்து வருகின்ற பலர்கூட எம்மை நேரடியாகத் தொடர்புகொண்டு ‘மில்லர்’ என்ற பெயரைத் தவிர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திரைப்படத்தின் பெயரை மாற்றுவதற்குத் தீர்மானித்து இருக்கின்றோம். திரைப்படத்தின் புதிய பெயராக “போராட்டம்” என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்” என தமிழ் வர்த்தகர் அறிவித்துள்ளார்.

Related Posts