2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு.அதற்கமைய, 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்ப்பு . இந்த வருடம் இதுவரை 1,373 மில்லியன் டொலர்கள் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளது. முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை. சிறிய மற்றும் நடுத்த அளவிலான தொழில்முனைவோருக்கு 5,900 மில்லியன் ரூபாய் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு. விவசாய அபிவிருத்திக்காக 1,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு. நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அடுத்த வருடத்திற்கான பல்வேறு கடன் வசதிகளுக்காக 80,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம். கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை. டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெற எதிர்ப்பார்ப்பு. டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவை ஸ்தாபிக்கப்படும். 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும். பிரஜைகளின் தரவுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிவ் ஆர் குறியீடுக்காக 5,000 க்கு குறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும். AI தரவு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காக இணைய சேவை வவுச்சர் வழங்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்ப கோபுரங்களை அமைப்பதற்கு முதலீட்டு வரியை 5 வருடங்களுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை. அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும். 82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். 16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும். அதன் மொத்த செலவினம் 12,000 மில்லியன் ரூபாவாகும். சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும். இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ஒதுக்கிடப்படும். இவ்வாறு ஜனாதிபதி தனது உரையில் தொிவித்துள்ளாா்.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொிவிக்கப்பட்டவை – Global Tamil News
7