455பில்லியன் மேலதிகமாக படைகளிற்கு!

by ilankai

அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் படையினரையும் தேவையற்ற படைத்தளங்களையும் வடகிழக்கில் பேணிவருவதுடன் மொத்த பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பையும் மொத்த செலவீனத்தின் 10 விழுக்காட்டையும் அனுர அரசும் இராணுவ இயந்திரத்திற்கே பயன்படுத்திவருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 1,757  பில்லியன் ரூபாயாகும். மொத்த வருமானம் 5,300   பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவினம்   7,057 பில்லியன் ரூபாயாகவும் அமைந்துள்ளது.இதனிடையே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆற்றியிருந்தார்.அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

Related Posts