10 நோயாளிகளை கொலை செய்த தாதிக்கு ஆயுள்தண்டனை – Global Tamil News

by ilankai

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்   2020-ம் ஆண்டு  ஆண் தாதியாக   பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தனது பணிக் காலத்தில் நோயாளிகளை   ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார். இந்த  சம்பவம் 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு மே வரையில் இடம்பெற்றுள்ளது.   10 நோயாளிகளை கொலை செய்துள்ள அவா் 27 பேரை கொல்ல முயற்சியும் செய்துள்ளார். இரவு நேர பணியின்போது, பணிச் சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தொிவித்துள்ளாா். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது  அவருக்கு  15 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேளை உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் இடம்பெற்று வருவதனால்  மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை  இடம்பெறும் எனத் தொிவிக்கப்படுகின்றது. 2019-ம் ஆண்டில் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் தாதி  ஒருவர் வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானார். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளை கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர். இவா்  ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர்   என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு கொடூர  சம்பவம் நிகழந்துள்ளமை குறிப்பிடத்தன்னது

Related Posts