பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு! – Global Tamil News

by ilankai

தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண காவற்துறைனர் குறித்த மூவரையும் கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது , பிள்ளைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை தொடர்பிலையோ, மருத்துவ அறிக்கைகளோ இல்லாத நிலையில், அவர்கள் மோசடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டமையால், அவர்களை கடுமையாக எச்சரித்த காவற்துறையினர் உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Related Posts