தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது , பிள்ளைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை தொடர்பிலையோ , மருத்துவ அறிக்கைகளோ இல்லாத நிலையில் , அவர்கள் மோசடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டமையால் , அவர்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார் உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்
1