இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தியுள்ளார். இதில், உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் வகிபாகத்தை பாராட்டி “beacon of strategic autonomy and South–South cooperation.” என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு விபரித்தார். இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டுமொறு முறை உறுதிப்படுத்தியதோடு, இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் சுட்டிக்காட்டினார். மேலும் பூகோளப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றத்தை எட்டிக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக்காட்டி, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் பாராட்டியுள்ளார். குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் விநியோக சேவைத் துறைகளில் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் வெளியிட்டதோடு, நியாயமான மற்றும் சமநிலையானதொரு உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க ஐக்கிய நாடுகள பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பினர் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவிற்கு காணப்படும் இயலுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் சஜித் சிறப்புரை நிகழ்த்தினார்! – Global Tamil News
7