4
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (04) புறப்பட்ட சரக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிாிழந்துள்ளனா். 1 லட்சத்து 44 ஆயிரம் லீற்றா் எரிபொருளை ஏற்றிச் சென்ற குறித்த விமானம் விபத்து காரணமாக முழுவதும் தீப்பற்றி எரிந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே இந்த விபத்து இடம்பெற்றதனால் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது Spread the love அமொிக்காகென்டகி மாகாணம்மீட்புப்பணிகள்லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையம்விமான விபத்து