நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கொக்குவில் சந்தையில் மரக்கறி வாங்க வந்த நபர் ஒருவருடன் வன்முறை கும்பல் ஒன்று , முரண்பட்டு, அவரை மிக மோசமாக தலைக்கவசங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தால் , சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள் , மரக்கறி வாங்க வந்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டதுடன் , சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கடந்த வாரம் திருநெல்வேலி , சந்தையினுள் சனநடமாட்டம் அதிமாக காணப்பட்ட பகல் வேளை நிறை போதையில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து , தகாத வார்த்தைகளை பேசி அட்டகாசம் புரிந்த நிலையில் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்தும் , அவர்கள் சம்பவ இடத்திற்கு வராத நிலையில் போதையில் அட்டகாசம் புரிந்தவரின் குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்று இருந்தனர். அதேபோன்று , கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் , சந்தைக்குள் போதையில் இரு தரப்பினர் , முரண்பட்டு , வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைக்குள் ஒரு தரப்பு புகுந்து அங்கிருந்த கத்தியை எடுத்து மற்றைய தரப்பின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர். இரு சந்தைகளிலும் நாளுக்கு நாள் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளை வாங்கி பாவிப்பவர்கள் மற்றும் வன்முறை கும்பல்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , அது அதனை கட்டுப்படுத்த நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
8
previous post