அம்பாறையில் இராணுவ சிப்பாய் ,சக சிப்பாயால் படுகொலை

by ilankai

தனது மனைவியுடன் தகாத உறவை பேணி வந்த சக இராணுவ சிப்பாயை , இராணுவ சிப்பாய் படுகொலை செய்துள்ளார். அம்பாறை மகா ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , வீட்டின் உரிமையாளரான மற்றுமொரு இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது மின்னேரியா இராணுவ முகாமில் தானும் ,  கொலை செய்யப்பட்டவரும் கடமையாற்றி வருகிறோம். அவர் எனது மனைவியுடன் தகாத உறவில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் அறிந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு , திடீரென நான் எனது வீட்டுக்கு வந்தவேளை அங்கு , என்னுடன் பணியாற்றும் இராணுவ சிப்பாயும் மனைவியும் ஒன்றாக இருப்பதனை அவதானித்து , அவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்தேன் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மகா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts