அனுர அரசு குழப்புகின்றதா?

by ilankai

மாவீரர் நாள் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளில் பங்குபற்றிய கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் பாரதிதாசன் எழில்வேந்தன கைதாகியுள்ளார்.மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, பாரதிதாசன் எழில்வேந்தன் அவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். நேற்றைய தினம் விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான நிலையில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவ்வாண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், ஏறக்குறைய பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பெற்றோர் கௌரவிப்பு நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களினை காரணம் காட்டி கைது இடம்பெற்றுள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீர் வழக்குத்தாக்கல் செய்து வேந்தன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நடவடிக்கையானது, தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.. இந்நடவடிக்கையானது கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தமிழ்த்தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளை அச்சுறுத்தி தடுக்கும் வகையிலேயே   மேற்கொண்டுவருகின்றதென உணர்வாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

Related Posts