திருட்டு குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த வாரம் விடுதலையான நபர் , மீண்டும் சங்கிலி அறுத்தமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை களவாடியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு , விசாரணைகளில் குற்றவாளியாக நீதிமன்று கண்டு , இளைஞனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனையில் இருந்து கடந்த வாரம் விடுதலை பெற்றிருந்தார். அந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அரியாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை களவாடியுள்ளார். அதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியிருந்தார். அது தொடர்பிலான காட்சிகளை குறித்த பல்பொருள் அங்காடியினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் , அதில் சங்கிலி அறுத்தவரின் முகம் தெளிவாக தெரிந்தமையால், ஊரவர்கள் அவரை அடையாளம் கண்டு, அந்நபரை மடக்கி பிடித்து, நயப்புடைத்து காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவற்துறையினர் அந்நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அரியாலை பகுதியில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை தானே களவாடியதாக என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்நபரிடம் இருந்து 3 இலட்ச ரூபாய் பணத்தினையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த நபரை காவல நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் திருட்டு குற்றத்திற்காக சிறையில் இருந்து விடுதலையானவர் – ஒரு வாரத்தில் மீண்டும் கைவரிசை! – Global Tamil News
6
previous post