யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோதே குறித்த நபர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.அதனை அடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவரும் 21 வயதுடைய ஐந்து சந்தி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேக நபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழில். 3200 போதை மாத்திரைகளுடன் கைது
2