பெண்களின் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் வெற்றிக்கிண்ணத்தை இந்தியா  தனதாக்கியது! – Global Tamil News

by ilankai

பெண்களின் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில்  இந்தியா முதற் தடவையாக வெற்றிக்கிண்ணத்தை  தனதாக்கியுள்ளது. நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (02.11.25) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இந்தியா சம்பியனானது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஷெஃபாலி வர்மாவின் 87 (78), தீப்தி ஷர்மாவின் 58 (58), ஸ்மிருதி மந்தனாவின் 45 (58), றிச்சா கோஷின் 34 (24) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 299 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக அணித்தலைவி லோரா வொல்வார்ட்டின் 101 (98) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஷ்றீ சரணி, ஷெஃபாலி (2), தீப்தி ஷர்மாவிடம் (5) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று 52 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இப்போட்டியின் நாயகியாக ஷெஃபாலியும், தொடரின் நாயகியாக தீப்தியும் தெரிவாகினர்.

Related Posts