தென்னிலங்கையில் அனுர அரசின் கைதுகள் மும்முரமடைந்துள்ளது.இன்றைய தினமும் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இரு முன்னாள் அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே விசாரணைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீண்டநாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹாநாம அபேவிக்ரம மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் சரத்சந்திர குணரத்ன ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.புதவிக்காலத்தில் முன்னெடுத்து ஊழல்கள் தொடர்பிலேயே கைதுகள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
			3
			
				            
			
			        
    
                        previous post