தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு – Global Tamil News

by ilankai

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் பெயர்ப் பலகையை யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் திரைநீக்கம் செய்து வைத்தார். குறித்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கொண்டனர். கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மக்கள் கூட்டணி எனும் அரசியல் கட்சி வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts