யாழ்ப்பாணத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து , அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதன் போது படகினுள் இருந்து , 185 கிலோ 600 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளனர். அதனை அடுத்து , படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியானது எனவும் , மீட்கப்பட்ட கஞ்சா . மற்றும் படகு என்பவற்றுடன் , கைது செய்யப்பட்ட இருவரையும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர் நெடுந்தீவு காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , விசாரணைகளின் பின்னர் இருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது – Global Tamil News
5