வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

Related Posts