5
யாழில். தொடரும் விசேட நடவடிக்கை – இன்றும் ஐவர் கைது யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இன்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர் , மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ள நிலையில் , ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் ,அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். Related Posts யாழ்ப்பாணம் Post a Comment