5
கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடையில் உள்ள குறித்த தொழிலதிபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது துப்பாக்கியுடன் 13 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் குறித்த தொழிலதிபர், கெஹல்பத்தர பத்மேவுக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் பத்மே குறித்த தொழிலதிபருக்கு துப்பாக்கியை வழங்கியதாக காவற்துறையினர் தெரிவித்தனர். அதற்காக தொழிலதிபர், கெஹல்பத்தர பத்மேவுக்கு 350,000 ரூபாய் வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.