செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து: உண்மையை வெளிப்படுத்து’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ”மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச் செய், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையை உறுதி செய், செம்மணியை மீண்டும் புதைக்க இடம் கொடுக்காதே..! அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு” ஆகிய வசனங்கள் அடங்கிய பதைதைகளை ஏந்திப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப் போராட்டத்தில் சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காதே: யாழில் போராட்டம்!
5