சந்திரிகா வீதியில்?

by ilankai

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு 7 இல் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து  சில நாட்களில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அவர் தமது சில உடைமைகள் சகிதம் அந்த வீட்டில் இருந்து தற்போது வெளியேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து பல முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில் வெளியேறுவதற்கு கால அவகாசம் கோரியிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார். 

Related Posts