இந்தியாவின் ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஷ்வராக சுவாமி கோவிலில் இன்று திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஆந்திரா மட்டுமின்றி தெலுங்கானா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று சனிக்கிழமை கோவிலுக்கு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். விரைவில் கார்த்திகை மாதம் பிறக்க உள்ளதனால் ஏகாதசி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பக்தர்கள் இன்று அதிகளவில் கூடியுள்ள நிலையில் திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளின் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. R
ஆந்திரா வெங்கடேஷ்வராக சுவாமி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி – Global Tamil News
5