முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப் விபத்து – நான்கு பொலிஸார் காயம்

by ilankai

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிசாரின் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த  நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர். ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான ஜீப் ரக வாகனம் முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சென்று மீண்டும் முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ்  உத்தியோகஸ்தர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இருவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts