மண்டைதீவு துடுப்பாட்ட மைதானம் – கள ஆய்வு! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார். அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் அமையப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும் எனவே மைதானம் அமைக்கப்பட கூடாது என இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர் அந்த நிலையில் நேற்றைய தினம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், யாழ். மாவட்ட மேலதிக செயலர் , வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் , வேலணை பிரதேச செயலாளர் , தவிசாளர், இலங்கை துடுப்பாட்ட சபை இணைப்பாளர் ,கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வள சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்,  வனவளத்திணைக்கள பிராந்திய உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர்  உள்ளிட்டோர் மைதானம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.

Related Posts