யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று , அவற்றுக்கான நான்கு மகசீன்கள் , மூன்று சிறிய குண்டுகள் , கிளைமோரை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்து பொருட்கள் , இரத்த கறையுடனான சாரம் என்பவை மீட்கப்பட்டுள்ளன. நூலகத்தின் கூரை திருத்த வேலைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது கூரைக்குள் இரண்டு மகசீன்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது அதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவின் ஒத்துழைப்புடன் , மகசீன்கள் இரண்டையும் மீட்டதுடன் , அதன் அருகில் சுமார் ஐந்தடி நீளமான வயரையும் மீட்டனர் அதனை அடுத்து கூரைக்குள் மேலும் வெடி பொருட்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கூரையினுள் மேலும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்த வேளை , ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று , மேலும் இரண்டு மகசீன்கள், மூன்று சிறிய குண்டுகள் , கிளைமோரை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்து பொருட்கள், சேலைன் , பஞ்சு , காயங்களுக்கு கட்டும் பன்டேஜ் , இரத்த கறையுடனான சாரம் உள்ளட்டவை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , நாளைய தினம் சனிக்கிழமை அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் , அதனை அடுத்து மன்றினால் வழங்கப்படும் கட்டளைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, துப்பாக்கி மகசீன் சுற்றப்பட்டு இருந்த பத்திரிக்கை , சேலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின் அடிப்படையில் அவை 2005 ஆம் ஆண்டு கால பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிற நிலையில் , கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். பல்கலையில் இருந்து , ரி – 56 துப்பாக்கி , நான்கு மகசீன்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு
			6
			
				            
			
			        
    
                        previous post