யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை – மூன்று நாளில் 08 பேர் கைது! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை  போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள்  , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts