பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதவான் பணியிடைநீக்கம்

by ilankai

பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதவான் பணியிடைநீக்கம் வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையே இந்த பணி இடைநிறுத்தத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts