கொழும்பில் 10 கண்ணீர் புகைக்குண்டுகள் மீட்பு – Global Tamil News

by ilankai

  அரகலய காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  10  கண்ணீர் புகைக்குண்டுகள்   அடங்கிய பை ஒன்று  கொழும்பு-07, சேர் ஏனஸ் டி சில்வா மாவத்தையில் உள்ள  கட்டடமொன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட   காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.   உணவினைப் பொதிச்செய்யும் ஒரு பையில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே  இடம்பெற்ற   போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள், போராட்டக்காரர்களின் கைகளில்  சிக்கி   இந்தக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்  என்று சந்தேகிக்கப்படுவதாக மூத்த  காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா் கண்ணீர் புகைக்குண்டுகள் அடங்கிய உணவு வகை பை வெயில் மற்றும் மழையின் தாக்கத்தால் சிதைந்துவிட்டதாகவும்  விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Related Posts