வாய் – மூக்கால் இரத்தம் வந்த நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை தாய்ப்பால் அருந்தி சில நிமிடங்களில் வாய் மற்றும் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையில் உயிரிழந்துள்ளது. நல்லிணக்கபுரத்தை சேர்ந்த குழந்தைக்கு தாயார் நேற்றைய தினம் புதன்கிழமை தாய்ப்பால் கொடுத்து விட்டு , குழந்தையை படுக்க வைத்த சில நிமிடங்களில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கால் இரத்தம் வடிந்துள்ளது. அதனை அடுத்து குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.   அதனை அடுத்து குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related Posts