5
ஊழல் குற்றச்சாட்டுக்களில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவருக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப்பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளார் மற்றொரு மோசடி பேர்வழியான யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப்பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்னம்பலம் சிறீPவர்ணன்இன்றைய தினம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமிருந்து தனக்கான நியமனக்கடிதத்தினை பெற்றுக்கொண்டார். இவர் முன்னர் யாழ்ப்பாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது.ஆக்காலப்பகுதிகளில் மோசடிகளில் ஈடுபட்டதனையடுத்து பதவியிலிருந்து வடக்கு ஆளுநரால் இவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.