ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் சிறார் பாலியல் துஷ்பிரயோக குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு சிறை செல்லவுள்ளார்.மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் இலங்கையைச் சேர்ந்த மூத்த பௌத்த துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான நாவோதுன்னே விஜிதா, 1994 மற்றும் 2002 க்கு இடையில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக வியாழக்கிழமை கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.70 வயதான துறவி, 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவர் பாலியல் ரீதியாக 4 வயதில் இருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துன்புறுதி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இவரால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் விகாரையில் சமய நெறி கற்க அவர்களின் பெற்றோரால் இவரை நம்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.
அவுஸ்திரேலியாவிலும் அடங்க மறுக்கும் பிக்கு!
3
previous post