அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” – Global Tamil News

by ilankai

தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் அடையாளப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் மறைமாவட்ட ஆயர்கள் அருட் சாகோதரர்கள் என பல கத்தோலிக்க பிரமுகர்கள் பங்கெடுத்திருந்தனர். முன்பதாக அணையா தீப தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக, மனித புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயான நுழைவாயிலைக்கு சென்று அங்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்

Related Posts