யாழில். சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு – ஒருவர் கைது! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் காவல்  பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்குடன் காவற்துறையினர்  விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் அதன் போது , இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை சட்டவிரோத மணலுடன் பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை காவற்துறையினர்   பிடிக்க முற்பட்ட வேளை , ஒரு உழவு இயந்திர சாரதி , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்ற நிலையில்  , மற்றைய வாகனத்தின் சாரதியை காவற்துறையினர்  பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரையும் ,  மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் , கொடிகாம காவல்  நிலையத்தில் தடுத்து வைத்துள்ள நிலையில் , தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவற்துறையினர்  மேற்கொண்டுள்ளனர். அதேவேளை கடந்த வாரம் குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற போது , தமது கட்டளையை மீறி தப்பி செல்ல முற்பட்டார் என உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 18 வயதான சாரதி  , படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts