முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு மீண்டும் ஜனவரி 28 ஆம் திகதி மீண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கை, மேலும் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.இன்றைய தினம் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆஜராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும், நீதிமன்றத்துக்கு வருகைதநதிருந்தார்.ஏற்கனவே கைதாகியிருந்த ரணில் விக்கிரமசிங்க பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனிடையே இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று புதன்கிழமை (29) பிடியாணை பிறப்பித்துள்ளார்.கடந்த 17ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3
previous post
மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு
next post