குரோக்பீடியாவை அறிமுகம் செய்தார் எலான் மக்ஸ்

by ilankai

விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.இணைய தேடுதலில் மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா உள்ளது. பிரபலங்கள் பற்றிய தகவல்களோ.. ஒரு நாட்டின் விவரங்களோ என எல்லாவிதமான தகவல்களும் இதில் கிடைக்கின்றன. விக்​கிமீடியா அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம் விக்கிபீடி​யாவை நிர்​வகித்து வரு​கிறது. இந்த தளம் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் தகவல்​களை வழங்கி வரு​கிறது. சுமார் 6.5 கோடிக்​கும் மேற்​பட்ட கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன.இந்த நிலையில், விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற புதிய தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். இந்த குரோக்பீடியாவில் முழுக்க முழுக்க ஏஐ- யால் சரிபார்க்கப்பட்ட ஏஐ பதிவுகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவை பொறுத்தவர்களை தகவல்களை யார் வேண்டுமானாலும் அப்டேட் செய்யலாம். இதனால், இந்த தரவுகள் சில நேரங்களில் சார்புள்ள பதிவுகளாக இருப்பதாக கூறியிருக்கும் எலான் மஸ்க், சார்பில்லாத தரவுகளை பெற குரோக்பீடியாவை நிறுவியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். தற்போது அறிமுகம் ஆகியிருப்பது 0.1 வெர்ஷன் தான் என்றும் இதுவே விக்கிபீடியாவை விட சிறப்பானதாக இருக்கும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், கடந்த 2023-ம் ஆண்டு குரோக் ஏஐ நிறுவனத்தை தொடங்கினார். இதன் அடுத்த கட்​ட​மாக எக்ஸ் ஏஐ சார்​பில் தற்​போது குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யம் தொடங்​கப்பட்டு இருக்கிறது. 

Related Posts