நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களின் அலையில் 90க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதற்கு பதிலளிக்கும் விதமாக, டஜன் கணக்கான பயங்கரவாத இலக்குகள் மற்றும் பயங்கரவாதிகளை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், காசாவில் ஒரு இஸ்ரேலிய சிப்பாயைக் கொன்ற தாக்குதலுக்கு ஹமாஸ் மீது குற்றம் சாட்டினார். மேலும் இறந்த பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டினார். இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியது.போர் நிறுத்தத்தை எதுவும் பாதிக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆனால் இஸ்ரேல் தனது வீரர்கள் குறிவைக்கப்படும்போது திரும்பித் தாக்க வேண்டும் என்று கூறினார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 90க்கு மேற்பட்டோர் பலி!
2