தென் மாகாண சபை கலைக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில், 15 மில்லியன் ரூபா பெறுமதியான பிளாஸ்டிக் கதிரைகளை கொள்முதல் செய்ய மற்றும் விநியோகத்தமையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பாக தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 55 பேரிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரள, மாகாண எதிர்க்கட்சியின் முன்னாள் தலைமை அமைப்பாளர் பி. அசோக தனவன்ச டி சில்வா மற்றும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ரந்திம கமகே உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆணையத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.
5
previous post