விமான விபத்தில் 12 போ் பலி – Global Tamil News

by ilankai

கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் உள்ள  மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான  மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. டயானி விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான மற்றும் காட்டுப்பகுதியில் இந்த விபத்து  இடம்பெற்றறுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது எனும் போதிலும்   குறித்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்   விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

Related Posts