ஹிஸ்புல்லாவிற்கு விசாரணை!

ஹிஸ்புல்லாவிற்கு விசாரணை!

by ilankai

தென்னிலங்கையில் முன்னாள் ஆட்சியளார்களது ஊழல்களை இலக்கு வைத்து புதிய அரசு விசாரணைகள் தொடர்கின்றது.இந்நிலையில் தற்போது கிழக்கிலங்கை பக்கம் அரசின் கவனம் செல்ல தொடங்கியுள்ளது.ஏற்கனவே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சொத்து சேர்ப்பு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா கானா நாட்டில் 2 மில்லியன் டொலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார். அது இலங்கையில் பெறுமதிக்கு 60 கோடிக்கும் அதிகமான தொகை என தெரிவிக்கப்படுகின்றது. கானா நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா தாக்கல் செய்திருந்த வழக்கில் கைது செய்த 11 பேருக்கும் பிணை வழங்கியுள்ளது. 2023 இல் பணப் பரிமாற்றம் ஹிஸ்புல்லாவால் செய்யப்பட்டதாகவும் 50கிகி தங்கத்தை வழங்க புரிந்துணர்வு ஒப்பத்தம் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன. 60 கோடிக்கு தங்கம் வாங்கும் அளவிற்கான பணம் ஒரு முழு நேர அரசியல்வாதிக்கு எங்கிருந்து வந்தது என்பதை அறியவேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன.

Related Posts