சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வடக்கில் பரவலாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய காவல்துறையின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.புதிய பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வவுனியாவிலும் போதைப் பொருள் விற்பனை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.தூயகத்திலும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் போதைபெர்ருள் வர்த்தகம் மூலம் கோடீஸ்வரர்களாகிய நபர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1
previous post
ஊழல் விசாரணை : நான்கு நீதிமன்றங்கள்!
next post