ஜனாதிபதி அலுவலகத்தில் காணோம்!

by ilankai

இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 29 வாகனங்களை காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஜனாதிபதி அலுவலக வாகனங்களது திருத்த பெயரில் கோடிகளில் பணம் அள்ளிவீசப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடிக்கடி பழுதுபார்ப்பு தேவை. வாகனங்களின் வயது மற்றும் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக செலவுகள் அதிகரிக்கின்றன என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய காலத்தில் பதிவுசெய்யப்பட்ட 29 வாகனங்களை கடந்த ஆண்டின்  ஜீன் முன்னதாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த வாகனங்கள் தொலைந்து போனதா, மாற்றப்பட்டதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டதா என்பதை சரிபார்க்க எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையென தெரியவந்துள்ளது.காணாமல் போயுள்ள வாகனங்கள் வேறு எங்கேனும் இருப்பதை உறுதி செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும்  விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts